Wednesday, February 11, 2015

செவ்வாய் தோஷம் பற்றிய விளக்கம் ..


மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.
 செவ்வாய் தோஷம் பற்றி இக்கட்டுரையில் காண்பது..
செவ்வாய் தோஷம் - விளக்கம்
                                              லக்னத்திலிருந்து செவ்வாய் 2-4-7-8-12ல் இருப்பது செவ்வாய் தோஷம் என்று பஞ்சாங்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.இது பொதுவான விதிகளே நவக்கிரங்கள் அனைத்தும் சேர்ந்து தான் ஒருவரின் குணம், நலம், வசதி, ஆயுள் என சகலத்தையும், நிர்ணயிக்கிறது. செவ்வாய் தோஷம் மட்டுமே ஒருவரின் வாழ்க்கைக்கு அதிமுக்கியமானதானது அல்ல, என்ற போதிலும் நமது தற்போது வெளிவந்துள்ள நூல்களில் வழங்கிவரும் செவ்வாய் தோஷம் பற்றிய விளக்கங்கள் தங்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய ஆய்வுப்படி செவ்வாய் தோஷத்தால் எவ்விதமான தீங்கும் ஒருவரால் மற்றவருக்கு வராது என்பது என்னுடைய உறுதியான முடிவு.
லக்னத்திலிருந்து செவ்வாய் 2-4-7-8-12 ல் இருப்பது செவ்வாய் தோஷம், அதுவே மகரம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசியில் இருந்து அது 7-மிடமாக இருப்பின் தவறில்லை செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதி அஸ்தமனம், நீச்சம் பெற்று செவ்வாய்க்கு 6-8-12ல் இருந்து வீட்டால் செவ்வாய் தோஷம் உண்டு செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதி லக்கனத்திற்கோ, ராசிக்கோ 5-9ல் இருப்பின் தோஷம் கிடையாது. செவ்வாய் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் ஆகிய லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், மிருகசீசம், சித்திரை, அவிட்டம், புனர்ப+சம், விசாகம், ப+ரட்டாதி, உத்திரம், உத்திராடம், கார்த்திகை, சுவாதி, திருவாதிரை, சதயம், ப+சம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களைப் பெற்று எங்கு இருப்பினும் அதிலும் 2-4-7-8-12ல் இருந்து எந்தக் கிரகத்தால் பார்க்கப்பட்டு இருப்பினும் பாதகமான பலன்களைத் தருகிறது.
செவ்வாய் தோஷம் பரிவர்த்தனை இருந்தாலும் தோஷமில்லை,சூரியனுடன் சேர்ந்த செவ்வாய்க்கும் தோஷமில்லை. செவ்வாய், ராகு,கேது தொடர்பு பெற்றும் தன்னுடைய பகை கிரகத்துடன் இருக்கும் போது மட்டுமே பாதிப்பு தருகிறது. எங்களின் ஆய்வுப்படி 90 சதவீகிதம் செவ்வாய் தோஷம் என்பது எவ்விதமான பாதிப்பையும் தருவதில்லை என்பதே என்னுடைய இறுதி முடிவு என்று கூறியுள்ள
திருக்கணிதஜோதிடர். ராணா.வேலுபாரதி ஆற்காடு அவர்களுக்கு நன்றிங்க.

செவ்வாய் தோஷம் .

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.செவ்வாய் தோஷம் எத்தனை நபர்களின் வாழ்க்கையை வீணாக்கியுள்ளது..செவ்வாய் தோஷம் பற்றி காண்போம்.

செவ்வாய் தோஷம்
பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில், திருமண வயதை எட்டிய (20 வயது முதல் 24 வயது வரை) , திருமண வயதைக் கடந்தும் (24 வயதைக் கடந்தும்) திருமணம் தடைபட்டு, திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் பெண்களை பெற்றுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் திருமணம் சம்மந்தப்பட்ட முக்கியமான சில பிரச்சினைகளுள் முதன்மையானதும், வேதனை தரக்கூடியதாகவும் இருக்கின்ற ஒரு விஷயம், இந்த செவ்வாய் தோஷம் தான்.
பெற்றோர்கள் தம் மக்களுக்கு திருமணம் நிச்சயிக்க முற்படும் போது திருமணப் பொருத்தம் பார்ப்பதற்காக ஜோதிடரை அணுகும் போது மணமகன் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார், மணமகள் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார். இரு வீட்டாரும் அவரவர் ஜோதிடர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு குழம்பிவிடுகின்றனர்.
செவ்வாய் தோஷத்திற்கு, தென் இந்திய மக்கள்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். வட இந்தியாவில் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியதுவம் தருவதில்லை.
சரி. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும். இது பொது விதி. சில விதி விலக்குகளும் உண்டு.
பொது விதியிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன.
இந்த முரண்பாடுகளைப் பற்றி முதலில் பார்த்துவிட்டு, விதிவிலக்குகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.

லக்கினத்திற்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்க வேண்டும். சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ பார்க்க வேண்டிய தேவையில்லை, லக்கினம் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
லக்கினத்திற்குப் பார்ப்பது போல, சந்திரனுக்கும் பார்க்க வேண்டும். சுக்கிரனுக்குப் பார்க்க வேண்டியதில்லை, லக்கினம் அல்லது சந்திரன், இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கோ அல்லது இரண்டிற்குமா செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷம் ஏற்படும் என்றும் லக்கினத்திற்கு மட்டும் செவ்வாய் தோஷம் அது முழு தோஷம் என்றும், சந்திரனுக்கு மட்டும் இருந்தால் அது அரைபங்கு தோஷம் என்றும் இரண்டுக்கும் இருந்தால் கடுமையான தோஷம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில ஜோதிடர்கள் லக்கினப்படி உள்ள பரிகார செவ்வாயை சந்திரனுக்கு உள்ள சுத்த செவ்வாயை பொருத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்களால் எழுதப்பட்டு “ தி லிட்டில் பிளவர் கம்பெனி ” பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட “ குடும்ப ஜோதிடம் ” என்ற நூலில் “ லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும் ” என்று பொது விதியையும் கூறி சில விதிவிலக்குகளையும் குறிப்பிடுகிறார்.
ஆனால் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாரல் நடத்தப்பட்ட “ ஜோதிடவியல் பட்டயச் சான்றிதழ் ” படிப்பிற்கான பாடத்திட்டத்தைத் தயாரித்த ஆசிரியப் பெருமக்கள் - பல நூறு ஜாதகங்களை ஆய்வு செய்தவர்கள் – பாடப்புத்தகத்தில் “ செவ்வாய் தோஷம் திருமணத்தைத் தாமதப்படுத்துமே தவிர தோஷத்தைத் தராது. ” என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர். மேலும், பல நுற்றுக்கணக்கான ஜாதகங்களை ஆராய்ந்து அனுபவம் மிக்க ஜோதிடர் ஸ்ரீமான் ஓ.பி. லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், அவர்களால் எழுதப்பட்டு ஆனந்தபோதினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ஜோதிஷ பாவத்திரைய நிர்ணயம் என்ற நூலில் செவ்வாய் தோஷம் என்று ஒரு தோஷமே இல்லை என்று குறிப்பிடுகிறார்.
இனி விதி விலக்குகளைப் பற்றி பார்ப்போம்.
1) மேற்படி 2, 4, 7, 8, 12 –மிடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷம், விருச்சிகம் நீச்ச வீடாகிய கடகம், உச்ச வீடாகிய மகரம் ஆகிய ராசிகளாக இருந்து அங்கே செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
2) 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கும் செவ்வாய், - சூரியன், சனி, குரு ஆகிய இம்மூன்று கிரகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
3) ஜென்ம லக்கினம் கடகமாகவோ, சிம்மமாகவோ இருந்தால், 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.
4) செவ்வாய் இருக்குமிடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்து அது 2 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
5) செவ்வாய் இருக்குமிடம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து அது 4 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
6) செவ்வாய் இருக்குமிடம் கடகம் அல்லது மகரமாக இருந்து அது 7 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
7) செவ்வாய் இருக்குமிடம் தனுசு அல்லது மீனமாக இருந்து அது 8 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
8) செவ்வாய் இருக்குமிடம் ரிஷபம் அல்லது துலாமாக இருந்து அது 12 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
9) எந்த லக்கினமானாலும், செவ்வாய் இருக்குமிடம் சிம்மம் அல்லது கும்பமாக இருந்து, அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.
10) 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் செவ்வாய் சந்திரன் அல்லது புதன் அல்லது சந்திரன், புதன் இருவருடன் சேர்ந்திருந்தால் தோஷம் இல்லை.
11) செவ்வாய் நின்ற ராசி அதிபதி லக்கினத்திற்கு கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் இருந்தால் தோஷம் இல்லை.
12) செவ்வாய் 8, 12 – ல் இருந்து செவ்வாய் நின்ற ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆனால் தோஷம் இல்லை.
13) ராகு, கேது -களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால், தோஷம் இல்லை.
14) செவ்வாய் சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இருந்து அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.
மேற்கண்ட பதினான்கு விதி விலக்குகளையும் தேவகேரளம் என்ற மூல நூலிலிருந்து ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்கள் தொகுத்து குடும்ப ஜோதிடம் – நூலில் தந்துள்ளனர்.
மேற்படி 14 விதிவிலக்குகளையும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பொது விதியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். அதையாவது முழுமையாக பயன் படுத்துகிறார்களா? என்றால் இல்லை. லக்கினத்துக்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும், என்று ஒரு ரகம், லக்கினத்துடன் சந்திரனுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம், லக்கினம், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்றுக்கும் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம்.
ஒரு சில ஜோதிடர்கள் மேற்படி விதி விலக்குகளை பயன்படுத்துகின்றனர். எப்படி தெரியுமா?
2, 4, 7, 8, 12 – ல் செவ்வாய் இருந்து விதிவிலக்குகளில் ஏதாவது ஒன்றிரண்டின்படி செவ்வாய் தோஷம் இல்லாமலிருந்தாலும், இது பரிகாரச்செவ்வாய் அல்லது கழிக்கும் செவ்வாய், பரிகாரம் செய்து தோஷதைக் கழிக்க வேண்டும் இல்லையென்றால் விபரீதம் ஏற்படும் என்று கூறி பரிகாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பணம் கறந்துவிடுகின்றனர்.

இப்படி முரண்பாடுகளையும், விதிவிலக்குகளையும் கொண்டுள்ள செவ்வாய் தோஷத்தைப் பற்றிய மேலும் சில கருத்துக்களையும் பார்போம்.
மணமக்கள் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றவருக்கு இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணம் அடைவார், என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து சரியானது என்றால், மரணம் எப்பொழுது நிகழும்? என்று கேட்டால் செவ்வாய் திசையில் அல்லது செவ்வாய் புத்தியில் அல்லது செவ்வாய் அந்தரத்தில் மரணம் ஏற்படும் என்று கூறுவார்கள்.
செவ்வாய் திசையில் மரணம் ஏற்படும் என்றால்....
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை சுமார் 70 – 80 வயதுக்கு மேல்தான் நடைமுறைக்கு வரும். 70 – 80 வயதுக்கு மேல் மரணம் என்பது சாதாரண விஷயம்.

செவ்வாய் புத்தியில் ஏற்படும் என்றால்.....
எந்த திசையில்? பொதுவாக ஒவ்வொரு மனிதனும் திருமணத்திற்குப் பிறகு சராசரியாக 3 அல்லது 4 திசைகளை சந்திக்கின்றனர்.

செவ்வாய் அந்தரத்தில் என்றால்.....
எந்த திசையில்? எந்த புத்தியில்?

யாருடைய ஜாதகப்படி செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் மரணத்தை தரும்?
செவ்வாய் தோஷம் உள்ளவர் ஜாதகப்படியா? செவ்வாய் தோஷம் இல்லாதவர் ஜாதகப்படியா?
இப்படி கேள்வி கேட்டால், இவன் விதண்டாவாதம் செய்கிறான், இவனுக்கென்ன தெரியும்? நான் என் அணுபவத்தில் எத்தனை ஜாதகங்களை பார்த்திருப்பேன்? என்னைவிட அவன் பெரிய இவனா? என்று ஏளனம் செய்வார்கள்.
இப்படி சொல்லும் பல ஜோதிடர்களிடம் கணவன் மணைவி இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்து இருவரில் ஒருவர் மரணம் அடைந்து மற்றவர் உயிருடன் இருக்கும் ஒரே ஒரு ஜோடி ஜாதகத்தை ஆதாரமாகத் தாருங்கள் என்று நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.யாரும் தரவில்லை.
ஆனால் என்னிடம் இருவரில் ஒருவருக்கு செவ்வாய்
தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்து இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாதகங்களும், இருவருக்கும் செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்து, திருமணத்திற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றவர்கள் ஜாதகங்களும் உள்ளன.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தை நிர்ணயிப்பதற்கு முன், கீழ்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1) அந்தந்த ஜாதகப்படி ஆதிபத்தியத்தின் அடிப்படையில் செவ்வாய் சுபரா? பாவியா?
2) அந்தந்த ஜாதகப்படி செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி யார்? செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதியின் நிலை சாதகமானதா? பாதகமனதா?
3) மணமக்கள் இருவருக்கும், தோஷம் இருகிறது, அல்லது தோஷம் இல்லாமல் சுத்த ஜாதகமாக இருக்கிறது, என்ற நிலையில் திருமணத்திற்குப் பிறகு நன்மை இல்லாவிட்டாலும் எந்த தீய நிகழ்வுகளும் ஏற்படாது? என்பதற்கு எதுவும் உத்திரவாதம் உண்டா?
4) சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய எட்டு கிரகங்களும் தோஷத்தைத் தராதா?
5) 2, 4. 7, 8, 12 ஆகிய இடங்களைத் தவிர 1, 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் உள்ள செவ்வாய் தோஷத்தை செய்யாதா?
6) முன்னதாகக் கூறப்பட்ட 14 விதிவிலக்குகளையும் அனுசரிப்பதா? வேண்டாமா?
7) ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் மூலநூல்களில் கூறப்பட்டுள்ள ராஜயோக கிரக அமைப்பு இருந்த போதும் நடைமுறையில் அனுபவத்தில் ஒத்துப்போகவில்லை, ஏன் என்று கேட்டால் பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து “ சில சிறப்பு விதிகளின்படி யோகம பங்கம் ஏற்பட்டுவிட்டது ”, என்று கூறுகிறார்கள். அதுபோல இந்த செவ்வாய் தோஷத்திற்கு தோஷ பங்க நிலை ஏற்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டுமா? கூடாதா?
8) லக்கினத்திற்கு மட்டும் தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும் என்று கூறுபவர்களுக்கு – களத்திரக்காரகன் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா? உடல் காரகன் மற்றும் மனோகாரகன் சந்திரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா?

இராசிகளும் -வழிபடும் கோவில்களும்


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இராசியுள்ளவர்களும் வழிபடும் கோவில்களும் பற்றி காண்போம்.
ராசி-- கோவில்
1.மேஷ ராசி காரர்கள் ----ராமேஸ்வரம் ,பழனி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
2.ரிஷப ராசி காரர்கள் ----திருபதி ,திருபரம்குன்றம் , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
3.மிதுனம் ராசி காரர்கள் ----பழனி ,கோடி ஹத்தி பெருமாள் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
4.கடகம் ராசி காரர்கள்--ராமேஸ்வரம்,திருதேவன்குடி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
5.சிம்மம் ராசி காரர்கள்--ஸ்ரீ வாஞ்சியம் ,பருதியப்பர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
6.கன்னி ராசி காரர்கள்--திருகழுகுன்றம் ,திருகண்ணன் மங்கை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
7.துலாம் ராசி காரர்கள்---திருத்தணி ,நரசிங்கம் பேட்டை , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
8.விருச்சகம் ராசி காரர்கள்---காஞ்சிபுரம் ,ஓமந்தூர்,மதுரை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
9.தனுஷு ராசி காரர்கள்--மாயவரம் ,திருவெண்காடு கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
10.மகரம் ராசி காரர்கள்---சிதம்பரம் ,அனந்த மங்களம் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
11.கும்பம் ராசி காரர்கள்---தேவிபட்டினம் ,கும்பகோணம்( கும்பேஈஸ்வரர் ) ,திருகோஷ்டியூர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
12.மீனம் ராசி காரர்கள்---வைதீஸ்வர சுவாமி ,திருவையாறு ,மச்சமுனி தீர்த்தம் (திருபரம்குன்றம் ),திருவலஞ்சுழி

ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பொருந்தக்கூடிய நட்சத்திரங்களும்,மாமியாருக்கு கெடுதல் தரும் இடங்களும்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 ஆயில்யம் நட்சத்திரம் பொருந்தக்கூடிய நட்சத்திரங்கள் பற்றி காண்போம்.மற்றும் மாமியாருக்கு கொடுதலா?என்ற தகவலையும் பார்ப்போம்.

ஆயில்ய நட்சத்திரம் (கடக ராசி)

இது புதனின் நட்சத்திரம்.

1. கார்த்திகை
2. மிருகசீரிஷம்
3. புனர்பூசம்
4. பூரம்
5. சித்திரை
6. சுவாதி
7. விசாகம்
8. அனுஷம்
9. திருவோணம்
10. அவிட்டம்
11. சதயம்

ஆகிய 11 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

மூலம், பூராடம், உத்திராடம் (1ஆம் பாதம்) ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு சதய நட்சத்திரம், அவிட்டம் 3 & 4, பூரட்டாதி 1, 2 &3 ஆம் பாதங்களுக்கும் உள்ளது. அவைகள்  கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் சதயமும், அவிட்டம் 3 & 4, மட்டும் பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.

அதே நிலைப்பாடு திருவாதிரை, மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள், புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் மிருகசீரிஷம், புனர்பூசம்  பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

அஸ்விணி, மகம், மூலம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஆயில்யம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது. பொருந்தவே பொருந்தாது!

திருவாதிரை, பூரம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

பரணி, ரோஹிணி, உத்திரம், ஹஸ்தம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 8 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி பொருத்தம் உள்ளவையாகும்! 


 ஒரு பெண்ணுக்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்து 10 ஆம் இடம் அல்லது வீடு என்று சொல்லப்படும் மாமியார் வீட்டில் புதன்+ராகு+செவ்வாய் இருந்தால் அல்லது 4 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் மாமியாருக்கு கெடுதல் உண்டாகும். இருந்தாலும், மாமியார் ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும்,எட்டாம் இடத்திற்குரிய அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும்,குரு உச்சம் பெற்று இருந்தாலும் மாமியாருக்கு எவ்வித கெடுதலும் வராது.ஆகவே நட்சத்திரத்தை மட்டும் பார்த்து திருமணப் பொருத்தம் முடிவு செய்வது சரியில்லைங்க!.

திருமணப் பொருத்தம் பார்க்க.....

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம்.

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது திருமணம் நடைபெறும் .ஆணின் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதி , 7 இல் இருக்கும் கிரகம் , 7 ஆம் வீட்டை பார்க்கும் கிரகம் - இதன் திசா புக்தி காலங்களில் குரு பலம் அமையும் பொழுது திருமணம் நடைபெறும் .
               திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும். ஒவ்வொருவரின் கிரக நிலைகளுக்கேற்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பற்றி பல நூல்களில் குறிப்பிட்டு இருப்பதைப் போல பத்து பொருத்தங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய் தந்தையரையோ, உற்றார் உறவினர்களையோ தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை நமக்கில்லை. ஆனால், நமக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை உண்டு. தற்போதுள்ள சூழ்நிலையில் நிறைய காதல் திருமணங்கள் நடைபெறுகிறது. என்றாலும் அதற்கு கூட இப்பொழுதெல்லாம் பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறர்கள். மன ஒற்றுமை எப்படியிருக்கும். சண்டை சச்சரவில்லாத வாழ்க்கை அமையுமா? உடலுறவில் இன்பம் நீடிக்குமா? வம்ச விருத்தி எப்படியிருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் உண்டா, மாங்கல்ய பலம் எப்படி என்பதையெல்லாம் பறறி தெரிந்து கொள்ள பலவித பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.

மண வாழ்க்கை நீண்ட காலம் சந்தோஷமாகவும் மாங்கல்ய பலத்துடனும் செல்வம் செல்வாக்கு அனைத்தையும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுமென்றே அனைவரும் விரும்புகின்றனர். இதில் செவ்வாய் தோஷம் உண்டா, ராகு கேது தோஷம் உண்டா என்பதைப் பற்றியும் ஆராய்ந்து தான் செய்கின்றனர். இதற்கு பரிகரங்களும் செய்ய முடியுமா, எந்த நட்சத்திரத்திற்கு எந்தெந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்பதற்கான அனைத்து விளக்கங்களையும் நாம் ஜோதிட ரீதியாக அறியலாம். குறிப்பாக இருவருக்கும் நடைபெறக் கூடிய திசா புக்திகள் என்னென்ன? தசா சாந்தி உள்ளதா என்பதைப் பற்றியும் அறியலாம்.

திருமண ஜோடிகளுக்கு ஒரே திசையோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்ய முடியுமா என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். திருமண பொருத்தங்கள் பற்றி பல பழங்கால ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் மிகவும் புகழ் பெற்ற புத்தகமான காலவிதானத்தில் திருமண பொருத்தங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இனி தெளிவாகப் பார்ப்போம்.


காலவிதானம் என்ற புத்தகத்தில் 10 திருமணப் பொருத்தங்கள் பற்றி கூறியிருப்பதாவது :

பத்து பொருத்தங்கள் இருவரின் நட்சத்திரத்தை கெண்டு தசா பொருத்தத்தை தீர்மானிககிறோம். தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி தீர்க்கம் யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜீ, வேதை என்பனவாகும்.

தினப்பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி அதனை 9ல் வகுக்க மீதி தொகை 2, 4, 6, 8, 9 ஆக வந்தால் தினப் பொருத்தமானது உத்தமம். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 1 முதல் 9 வரை வருவது 1வது பரியாயம் 10 முதல் 18 வரை வருவது 2 வது பரியாயம் 19 முதல் 27 வரை வருவது 3வது பரியாயம் 1, 2வது பரியாயத்தில் 3, 5, 7 யும் 3வது பரியாயத்தில் 7 மட்டும் அதாவது 25வது நட்சத்திரத்தை மட்டும் தவிர்ப்பது உத்தமம். 3வது பரியாயத்தில் 3, 5 அதாவது 21, 23 வது நட்சத்திரம் தோஷமில்லை. 27வது நட்சத்திரம் வேறு ராசியாக இருந்தால் நல்லதல்ல. ஒரே ராசியானால் உத்தமம்.

பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 1வது என்றால் ஜென்மம். கலகம், 2வது சம்பத்தை உண்டாக்கும். 3வது விபத்து, 4 ஷேமம், 5. காரியத்தடை, 6. அனுகூலம், 7 வதை வேதனை, 8 சுபம், 9. மிகவும் சுபம். இவைதான் தினப் பொருத்தத்தின் பலன்கள். தினப் பொருத்த ரீதியாக பார்க்கும்போது சில பெண் ந ட்சத்திரத்திற்கும் சில ஆண் நட்சத்திரத்திற்கும் பொருத்தம் சரிவர வருவதில்லை.

கிருத்திகைக்கு ஆயில்யமும், சுவாதிக்கு சித்திரையும், பூராடத்திற்கு அனுஷமும், அவிட்டத்திற்கு பரணியும், சதயத்திற்கு கிருத்திகையும் வந்தால் தவிர்ப்பது உத்தமம். அப்படி வரும் பட்சத்தில் தம்பதிகளுக்கு கண்டம் உண்டாகும். மிருக சீரிஷத்திற்கு பூசமும், அஸ்தத்திற்கு மூலமும் தரித்திரமாகும்.

அஸ்வினிக்கு புனர்பூசம், சுவாதிக்கு உத்திராடமும் வந்தால் பெண் குழந்தை உண்டாகும். வதை தோஷம் குறைவு. உத்திராடத்திற்கு ரேவதியும் மூலத்திற்கு பூரட்டாதியும், பூராடத்திற்கு உத்திரட்டாதியும் பரணிக்கு பூசமும் ஆக வந்தால் தோஷம் இல்லை. 7வது நட்சத்திரம் எனறால் திருமணம் செய்யலாம்.

மகத்திற்கு விசாகம் என்றால் புத்திர பாக்கியம் இல்லை. விசாகத்திற்கு திருவோணம் என்றால் சக்களத்தி வருவாள். திருவோணத்திற்கு அஸ்வினி என்றால் பிரிவு. உத்திரத்திற்கு மிருக சீரிஷம் என்றால் பிரச்சனை ஏற்படும்.

ஏக நட்சத்திரம்

தினப்பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாகி, ரோகிணி, மகம், திருவாதிரை, விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி என்றால் ஏக நட்சத்திர ரீதியாக பொருத்தம் உத்தமம்.

பூரம், உத்திரம், புனர்பூசம், பூசம், சித்திரை அஸ்வினி, கிருத்திகை, உத்திராடம், அனுஷமாக இருந்தால் மத்திமம். மன பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.

ஆண்,பெண் இருவரும் பரணி, சுவாதி கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், சதயம் பூரட்டாதியாக வந்தால் திருமணம் செய்வது நல்லதல்ல.

ஏக நட்சத்திரமாக வரும் பட்சத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரண்டு ராசியில் வரும்போது ஆண் நட்சத்திரம் பாதம் முன்னும், பெண் நட்சத்திர பாதம் பின்பும் சுபம். பெண் நட்சத்திரப் பாதம் முன்னும் ஆண் நட்சத்திர பாதம் பின்னும் வந்தால் தவிர்ப்பது நல்லது. ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்க்கும்போது ஒரே ராசியில் பரணியும் கிருத்திகையும், பூசமும் ஆயில்யமும் அவிட்டமும் சதயமுமாக வந்து ஆண் நட்சத்திரம் முன் நட்சத்திரமாக வந்தாலும் தவிர்ப்பது நல்லது.

பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரில் ஒருவரின் நட்சத்திரம் மகம், மிருக சீரிஷம், சுவாதி மற்றும் அனுஷமாக இருந்தால் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என ஒரு விதி உண்டு.

அஸ்வினி, கிருத்திகை, மகம், ரோகிணி, அஸ்தம் சுவாதி, பூராடம், சதயம் ஆகிய 8 நட்சத்திரமும் ஏக நட்சத்திரமாக வந்து பெண் நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.

தின பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வளமான வாழ்க்கை பற்றி அறியலாம்.

 
கணப்பொருத்தம்

கணம் குணமென பொருள்படும். கணப்பொருத்தம், தம்பதிகளுக்குள் தாம்பத்ய திருப்தியையும், மனம் மற்றும் குண ஒற்றுமையையும் வழங்கும்.

தேவகணம் : அஸ்வினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

மனுஷ கணம் : பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

இராட்சஷ கணம் : கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

ஆண் பெண் இருவருக்கும் ஒரே கணத்தில்அமைவது உத்தமம்.

பெண் தேவ கணத்திலும், ஆண் மனுஷ அல்லது ராட்சஷ கணத்தில் இருப்பது நல்லது.

பெண் மனுஷ கணத்திலும் ஆண் தேவகணத்திலும் இருப்பது நல்லது.

பெண் மனுஷ கணத்திலும் ஆண் இராட்சஷ கணத்திலும் இருப்பது தவறு.

பெண் ராட்சஷ கணத்திலும் ஆண் தேவ அல்லது மனுஷ கணத்திலும் இருப்பது தவறு.

விதி விலக்குகள் :

பெண் இராட்சஷ கணத்தில் இருந்தாலும் ஆண் நட்சத்திரத்திற்கு 14ம் நட்சத்திரத்திற்கு மேல் பெண் நட்சத்திரம் இருப்பதும் நல்லது.

கணப் பொருத்தம் இல்லாத நிலையிலும் ஆண், பெண் இருவரும் ஒரே இராசியில் பிறந்திருத்தல் இராசி அதிபதிகள் நட்பாக இருத்தல் அல்லது 7ம் பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்தல் போன்ற அமைப்புகள் பரிகாரமாகும்.

மகேந்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம் பொருள் வளத்தையும் குழந்தை பாக்கியத்தையும் குறிப்பதாகும். பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 19, 13, 16, 19, 22, 25ம் நட்சத்திரமாக பெண் நட்சத்திரம் வரவேண்டும். 4, 7, 10ம் வீடுகளை கேந்திர வீடுகள் என அழைப்பது போல பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 10ம் நட்சத்திரங்கள் கேந்திர நட்சத்திரங்களாக கருதப்படுகிறது. 1, 2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 20, 21, 23, 24, 26, 27 ஆகிய நட்சத்திரங்களுக்கு மகேந்திரம் இல்லை.

ஸ்திரி தீர்கம் :

ஸ்திரி தீர்க்கம் பொருள் வளத்தையும் செல்வம் செல்வாக்கையும் வழங்குவது ஆகும். திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க உதவுவது இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் ஆகும். பெண் ந ட்சத்திரத்திற்கு 13ம் நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் அமைவது உத்தமமாகும். 7க்கு மேல் மத்திமானது.
 யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும், தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும். யோனி ஆண், பெண் இனக்குறிகளை குறிக்கும். 14 வகை மிருகங்களின் காம உணர்வு 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது

குதிரை - அசுவனி, சதயம்

யானை - பரணி, ரேவதி

ஆடு - கார்த்திகை, பூசம்

நாகம் - ரோகினி, மிருக சீரிஷம்

நாய் - திருவாதிரை, மூலம்

பூனை - புனர்பூசம் ஆயில்யம்

எலி - மகம், பூரம்

பசு - உத்திரம், உத்திரட்டாதி

எருமை- அஸ்தம், சுவாதி

புலி - சித்திரை, விசாகம்

மான் - அனுஷம், கேட்டை

குரங்கு - பூராடம், திருவோணம்

கீரி- உத்திராடம்

சிங்கம் - அவிட்டம், பூரட்டாதி

பலனறிதல்

குதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம். இதேபோல் யானை சிங்கம் ஆடு குரங்கும், நாகமும் கீரியும், நாயும் மானும், பூனை எலியும், புலி பசுவும், ஒன்றுக்கொன்று பகையாம் எனவே, இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக் கூடாது.

இதன்படி அஸ்வினி அல்லது சதய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கும் அஸ்தம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு இடையில் யோனி பொருத்தம் ஏற்படாது.

(குதிரை) அசுவினி, சதயம் - அஸ்தம், சுவாதி (எருமை)

(யானை) பரணி, ரேவதி - அவிட்டம் பூரட்டாதி (சிங்கம்)

(ஆடு) கார்த்திகை பூசம் - பூராடம், திருவோணம் (குதிரை)

(நாகம்) ரோகிணி, மிருக சீரிஷம் - உத்திராடம் (கீரி)

(நாய்) திருவாதிரை, மூலம் - அனுஷம் கேட்டை (மான்)

(பூனை) புனர்பூசம், ஆயில்யம் - மகம், பூரம் (எலி)

(பசு) உத்திரம், உத்திரட்டாதி - சித்திரை, விசாகம் (புலி)
 இராசி பொருத்தம்

தம்பதிகளுக்குள் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பை அறிய உதவும் விதிகள்
ஆண் பெண் இருவரும் ஒரே ராசியாக இருத்தல் நலம்.

இருவர் ராசிகளும் ஒன்றுக்கொன்று 7ம் இராசியாக இருக்கலாம். ஆனால், இருவர் ராசிகளும், கடகம் மகரமாகவோ, அல்லது சிம்மம் கும்பமாகவோ இருக்கக் கூடாது.

பெண் ராசிக்கு 2ம் ராசியாக ஆண் ராசி வரக்கூடாது. வாழ்க்கை பாதிக்கும். பெண் ஒற்றை ராசிகளில் பிறந்திருந்தால் நல்லது.

3ம் இராசியில் ஆண் அமைந்தால் மகிழ்ச்சி இருக்காது. 4ல் இருந்தால் சோகமான வாழ்க்கை அமையும்.

5ம் இராசியில் ஆண் அமைந்தால் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நிகழும். ஆனால், பெண் மேஷம் அல்லது கடக ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.

6ம் இராசியில் ஆண் அமைந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பை தரும். பெண் ஒற்றை ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.

9, 10, 11 மற்றும் 12ம் ராசிகளில் ஆண் ராசி அமைதல் சிறப்பு.

மேஷத்துடன் கன்னிக்கும், தனுசுடன் ரிஷபத்திற்கும் துலாத்துடன் மீனத்திற்கும், கும்பத்துடன் கடகத்திற்கும் மிதுனத்துடன் விருச்சிகத்திற்கும் சஷ்டாஷ்டம் (6, 8) தோஷம இல்லை.

இராசி அதிபதி பொருத்தம்

ஆண், பெண் இருவரின் ராசியாதிபதிகள் நட்பாக வந்தால் உத்தமம். சமமாக வந்தால் மத்திமம். பெண் ராசியாதிபதிக்கு ஆண் ராசியாதிபதி பகையாக வந்தால் பொருந்தாது.

வசியப் பொருத்தம்

வசியப் பொருத்தம் மூலம் தம்பதிகளுக்குள் உள்ள பரஸ்பர அன்பையும் நெருக்கத்தையும் அறியலாம்.

ராசிகள் - வசிய ராசிகள்

மேஷம் - சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் - கடகம், துலாம்
மிதுனம் - கன்னி
கடகம் - விருச்சிகம், தனுசு
சிம்மம் - துலாம்
கன்னி - ரிஷபம், மீனம்
துலாம் - மகரம்
விருச்சிகம் - கடகம், கன்னி
தனுசு - மீனம்
மகரம் - மேஷம், கும்பம்
கும்பம் - மீனம்
மீனம் - மகரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக வந்தால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசிய ராசியாக வந்தால் மத்திமம்.

ரஜ்ஜீ பொருத்தம்

பத்து விதமான பொருத்தங்களில் ரஜ்ஜீ பொருத்தம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த பொருத்தம் மனைவி, கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும் பாக்கியத்தை வழங்குகிறது. நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகிணி, தலையில் மிருக சீரிஷம் என நட்சத்தரிங்களை ஏறு முகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ் நோக்கி வருபவை அவரோகணம் என்றும் கூறப்படும்.

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி இந்த 6ம் பாத ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி இந்த 6ம் தொடை ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

விசாகம், கிருத்திகை, உத்திராடம், புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி இந்த 6ம் வயிறு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

சதயம், அஸ்தம், சுவாதி, ரோகிணி, திருவோணம், திருவாதிரை, இந்த 6ம் கழுத்து ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த 3ம் சிரசு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.
சிரசு ரஜ்ஜீவில் கூடினால் கணவன் மரணம்.

கழுத்தில் கூடினால் பெண் மரணம், வயிறு கூடினால் சந்ததியில்லை. தொடை ரஜ்ஜீவானால் தன விரயம். பாத ரஜ்ஜீ என்றால் பல இடங்களில் சுற்றி திரியக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் ஒரே ரஜ்ஜீவானால் ஆகாது.

வேதை பொருத்தம்
வேதை என்பது பாதிப்பு எனப் பொருள்படும். குறிப்பிட்ட நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தும்.

அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரைக்கு - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசத்திற்கு - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
அஸ்தம் - சதயம்
உத்திரம் - பூரட்டாதி

இவை ஒன்றுக்கொன்று வேதையாகும். மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை, வேதையானால் பொருந்தாது. திருமணம் செய்யக்கூடாது. ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் இந்த 4 லும் ஆண் நட்சத்திரமானால் திருமணத்தில் தோஷம் இல்லை. பெண் நட்சத்திரமானால் தோஷம் உண்டு.

பெண் நட்சத்திரம் மூலமானால் மாமனாருக்கு தோஷம். ஆயில்யம், மாமியாருக்கும், கேட்டை, மூத்த மைத்துனருக்கும், விசாகம், இளைய மைத்துனருக்கும் தோஷமாகும்.

பொதுவாக ஜென்ம ராசிக்கு 8வது ராசியில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டமம் இதில் எந்த சுபகாரியங்களையும் செய்ய கூடாது.

நட்சத்திரத்தில் பொருத்தத்தில் விதி விலக்குகள்

ராசி பொருத்தம், அல்லது ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் ஸ்திர தீர்க்க பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் தவறில்லை.

ஆண், பெண் இருவரும் ஏகராசி அல்லது சம சப்தம் ராசிகளில், இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லையென்றாலும் தவறில்லை.

பெண்ணின் ராசி ஒற்றை படை ராசியாக அமைந்து அதற்கு 6 அல்லது 8ம் ராசியாக ஆணின் ராசி அமைவது நல்லது.

பெண் ஆண் இருவருக்கும் ஒரே திசை, புக்தி நடக்கக் கூடாது. அது தசா சந்தியாகும். தவிர்ப்பது. மிகவும் நல்லது. திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றால் 3 வருட இடைவெளி இருக்க வேண்டும்.

பொதுவாக ஜனன லக்னம், ராசி அல்லது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12ம் வீடுகளில் அசுப கிரகங்கள் இருப்பது, தோஷமாகும். குறிப்பாக செவ்வாய் இருப்பதை செவ்வாய் தோஷ அமைப்பு என்கிறோம்.

ஆண், பெண் இருவருக்கும் 1, 7, 2, 8 போன்ற இடங்களில் ராகு கேது அமைவதும் எல்லா கிரகங்களும், ராகு கேது பிடிக்குள் இருப்பதும் சர்பதோஷ அமைப்பாகும்.

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அமையப் பெற்றவருக்கும் அதே போல தோஷங்கள் உள்ள வரையே திருமணம் செய்ய வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு லக்னத்திற்குள் 2, 7 மற்றும் 11ம் வீடுகளில் உள்ள கிரகங்களின் திசை புக்தி 7ம் வீட்டு நட்சத்திர அதிபதியின் திசை புக்தி காலம் 7ம் வீட்டை பார்க்கும் கிரகங்களின் திசை புக்தி காலம், சுக்கிரன் நின்ற வீட்டதிபதியின் திசை புக்தி காலம் போன்றவற்றில் திருமணம் நடைபெறும்.

கோட்சார ரீதியாக ஜெனன ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் வீடுகளில் குரு சஞ்சரிக்கும் காலத்திலும் திருமணம் நடைபெறும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா?

கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா?

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கான பதிவு இது.மற்ற வலைத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களும் அடங்கும்.

(1) ஆயில்யம் நட்சத்திரம்  பற்றிய ஆய்வு தகவல்: - ஜோதிடர் P .பாலச்சந்திரன் அவர்களுக்கு நன்றி....

      ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அந்தப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
இதெல்லாம் பொதுவாக சொல்லப்படுவது. மகம் என்றால் ஜகத்தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத்திரத்தில் பிறந்து மாடு மேய்ப்பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கிறோம். நட்சத்திரத்தை மட்டுமே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.

மாமியார் ஸ்தானம் அந்தப் பெண்ணிற்கு நன்றாக இருக்கிறது. மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் ஆயில்யமாவது, விசாகமாவது தைரியமாக பெண் எடுக்கலாம். நீங்க நல்லா இருக்கணும்னு சொல்லிதானே இதை எடுத்துத் தருகிறேன் என்று சொன்னேன்.

பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாக பேசுவார்கள். முகத்தை உம்மென்று வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழ்நிலையிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

கடக ராசிக்கார்கள்தா‌ன் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்று மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. ஆனால் ஆயில்யத்தில்தான் "ப்ளக்சிபிளிட்டி ஸ்டார்" என்று எங்க தாத்தா சொல்வார். எந்தத் தருணத்திலும் தன்னை மாற்றிக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நட்சத்திரம் அது.

யார் இதனுடைய அதிபதி? 

புதன். புதனுடைய நட்சத்திரம். புதன் கூட்டுக் குடும்பங்கள், பாரம்பரிய பெருமைகள் இதையெல்லாம் காப்பாற்றுவதற்கு உரிய கிரகம். அது ந‌ன்றாக இரு‌ந்தா‌ல் இ‌ந்த ந‌ட்ச‌த்‌திர‌ங்களை‌‌த் த‌வி‌ர்‌க்கவே கூடாது. இ‌தி‌ல் ந‌ல்ல அ‌றிவா‌ளிக‌ள், பு‌த்‌திசா‌லிக‌ள், பெரு‌ம் பண‌க்கார‌ர்க‌ள், ‌நிறுவன‌ங்க‌ள் நட‌த்து‌கிறவ‌ர்க‌ள், அர‌சிய‌ல் தலைவ‌ர்‌க‌ள் இதுபோ‌ன்று பல கோண‌ங்க‌ளி‌ல் பல மேதைகளை நா‌ம் பா‌‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம்.

ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் பெ‌ண்க‌ள் 90 ‌விழு‌க்காடு, மாமனா‌ர், மா‌மியாரை ந‌ல்ல முறை‌யி‌ல் அனுச‌ரி‌த்து‌ப் போ‌கிறவர்க‌ள் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அதனா‌ல் ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் இரு‌க்கு‌ம் பெ‌ண்களை ஏ‌ற்று‌க் கொ‌ள்வது ந‌ல்லது. மா‌‌மியா‌ர் ‌ஸ்தான‌ம் ந‌‌ன்றாக இரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் ஒ‌ன்று‌ம் பா‌தி‌ப்பு இ‌ரு‌க்காது.



(2)கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்-பதிவிட்ட பூக்கள் வலைப்பூவிற்கு நன்றி...  

கடகம் (புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) 

கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.

உடலமைப்பு,
கடக ராசிக்காரர்களுக்கு மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான்பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெற்றிருப்பர்.
குண அமைப்பு,
கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னதான் தியாக மனப்பான்மை இருந்தாலும் வாக்களித்தவர்களையும் சொன்னதை செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.
மண வாழ்க்கை,
இவர்களுக்கு வாய்க்கக் கூடிய வாழ்க்கைத் துணை சலிப்பில்லாமல் உழைக்கக் கூடியவராக இருப்பார். எவ்வளவுதான் உழைத்தாலும் கடக ராசிகாரர்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டும், தங்களுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் கொஞ்சிப் பேசுகிறார்களே என நினைத்தால் அடுத்த கணமே திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து இருந்தாலும் இல்வாழ்க்கை அமைந்தது முதல் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்.
பொருளாதார நிலை,
கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பணத்தால் நெருங்கிப் பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். ஆடம்பர செலவிற்கேற்ப பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவது என்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் ஏற்படுத்தி விட்டு சென்ற கடனாக இருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்வதும், பொது நல காரியங்களுக்காக செலவு செய்வதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும்.
புத்திரபாக்கியம்,
கடக ராசி பெண் குழந்தை யோகமே உண்டு. அப்படியே இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறச் கூடிய கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தூர தேசங்களுக்கு சென்று பொருளீட்டக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும், சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். இவர்கள் லாட்டரி ரேஸ் போட்டி, பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டால் வீண் விரயங்களை சந்திப்பார்கள்.
உணவு வகைகள்,
கடக ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டம் அளிப்பைத் தரும்

எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி
 ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

(3)ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய  நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டி, டு, டே, டோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மெ, மை ஆகியவை யாகும்.

குண அமைப்பு;
ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்றறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகிய கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மன வலிமை¬யும், உடல் வலிமையும் ஒருக்கே பெற்றவர்கள். எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய திறனிருக்கும். நாளை நடப்பதை கூட முன் கூட்டியே அறிவர். மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள் கண்களால் ஆயிரம் கதை பேசுவார்கள். சற்றே சஞ்சல குணமும் உண்டு. இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
குடும்பம்;  
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமை வயப்பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்தால் பல தகிடு தத்த வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள் நொறுக்கு தீனி விரும்பிகள் என்பதால் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.
தொழில்;
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். அதிக மன தைரியம் கொண்டவர்கள் இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள். மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். பெயர் புகழ் அந்தஸ்து யாவும் பெருகும். அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள். பலரை நிர்வாகிக்கும் ஆற்றல் ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும் மெக்கானிக்கல், பொறியியல் துறைகளிலும் வல்லவர்கள்.
நோய்கள்; 
  இவர்களுக்கு, நுரையீரல், வயிறு, உணவு குழாய் மற்றும் குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு கல்லீரல், கணையம், ஈரல் போன்ற பாகங்களில் பிரச்சனைகள் உண்டாவதுடன், மூச்சு விடுவதில் சிக்கல்களும், மூட்டுகளில் வலியும், கால்களில் வீக்கமும், நரம்பு சம்மந்த பிரச்சனைகளும் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும்.
திசை பலன்கள்;
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இதன் மொத்த வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன்  தசா காலங்களை அறியலாம். முதல் திசையாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று பண்டைய நூல்களில் எழுதியிருந்தாலும் அது உண்மையா என்ற பல கேள்விகள் இன்றும் உள்ளது.
இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும்.
மூன்றாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.சூரியன் 6வருடம் சந்திரன் 10 வருடம் செவ்வாய் 7 வருடம் என நடைபெறும் இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.
ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு ராகு திசை மாரக திசையாகும். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.
செய்ய வேண்டிய நற்காரியங்கள்
     நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.
வழி பாட்டு  ஸ்தலங்கள்
சங்கரன் கோவில்;
     திருநெல்வேலிக்கு  வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.
புள்ள பூதங்குடி;
     கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.
திருப்புகலூர்;
     திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.
நாகூர்;
     நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.
திருவாரூர்;
     அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.
கூற வேண்டிய மந்திரம்
  ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே
     சர்ப்ப ராஜாய தீமஹி
     தந்நோ அனந்த ப்ரசோதயாத்
ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் அவர்களுக்கு நன்றி.


        வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில் அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை ஙிணீக்ஷீஷீரீuமீ ஜீமீணீக்ஷீறீ என்று கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர்.

உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான்.

இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920 ம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.

முத்தின் நன்மைகள்


முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.

முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.


யாரெல்லாம் முத்து அணியலாம்?

முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.

முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.

முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது.

செவ்வாய் தோசம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம்.
நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.

உதாரணமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும். காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம்
வேறுநபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில்
இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.

செவ்வாய் ராகு சேர்க்கையில் மோசமான சூழ்நிலையில் பிறந்திருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது. செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது செவ்வாய்தான்.


 ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 1,2,4,7,8,12 ஆகிய
ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால் செவ்வாய்தோஷமாகும். ஆணின் இலக்கனத்திற்கு 2,7ல் செவ்வாய் இருக்கும்போது பெண்ணுக்கு 4,12 ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் அல்லது செவ்வாய் தோஷ நிவர்த்தி:


செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு
இடத்திலிருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாய் 2மிடமாகி அது மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 4மிடமாகி அது மேஷம், விருச்சிகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 12மிடமாகி அது ரிஷபமும் துலாம் ஆனால் தோஷ மில்லை.
செவ்வாய் 7மிடமாகி இது மகரம் கடகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 8மிடமாகி இது தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை.
சிம்ம் கும்பம் செவ்வாய் இருந்தால் எந்த லக்னத்துக்கும் தோஷமில்லை
குருவும் செவ்வாய்ம் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
சந்திரனும் செவ்வாய்யும் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,தோஷம் கிடையாது.
இப்படியெல்லாம் பார்க்கையில் 5 சதவீத மக்களுக்குதான் செவ்வாய்தோஷம் இருக்கும் என தெரிகிறது.

செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
மனதாலும் உடலாலும் முற்பிறவிகளில் நாம் செய்யக்கூடிய பாவ செயல்களின் விளைவுகளே செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணமாகிறது. மற்றவர்களின் நலனை பாதிக்க கூடிய வகையில் நாம் செய்யும் செயல்கள் நமக்கு பின்பு பாப பலனாக வந்து சேர்கிறது. சுயநலமின்றி சமுதாய
நலனுக்காக நாம் செய்யும் சில செயல்கள் கூட தோஷங்களை ஏற்படுத்தலாம்.
 செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, வேற்றுமதத்தில்
மண முடித்து பிரிவினையாதல், பிறருடைய வாழ்க்கை துணைவரின் மேல் காதல் கொள்ளுதல்,
தகாத உறவு, சந்தேக குணம், இடைக்கால பிரிவு, மக்கட்பேரின்மை, மணமுறிவு
மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமை இன்மை, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை,
முரட்டு பிடிவாதம், சந்ததி இன்மை, சுகமின்மை, ஒழுக்கமின்மை,இல்லற வாழ்க்கையின்
நன்மை அறியாமை, மாங்கல்ய பலமில்லாமை, ஆயுள் பலமின்மை,புத்திர தடை,
தத்து புத்திரம், கர்பம் கலைதல், அற்ப ஆயுள் புத்திரம் , புத்திர சோகம், தாமத புத்திரம்
முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம். 
 செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?

செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல்.
உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும்,பெற்றோரிடம் பாசமின்மை,கண் நோய்,
தலையில் காயம்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகுந்த உடல் வியாதி, மூட சிந்தனை ,
சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம்,தற்புகழ்ச்சி முதலியன.
செவ்வாய் 2ல் இருந்தால் தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். குடும்பம்
பொருளாதரங்களில் ஏற்படும் பிரச்சனைகள்.தாராளமனசு ,ஊதாரி செலவு ,கபடமற்ற
வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக பெறுதல் முதலியன
செவ்வாய் 3ல் இருந்தால் சகோதர வகையில் பிரச்சனை
செவ்வாய் 4ல் இருந்தால் சுக அளவில். குடும்ப சந்தோஷம் வாழ்க்கை வசதிகளில் பிரச்சனை,
மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து , கல்வியில் மந்தம் ,உறவினர்
சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு
ஆனாலும் மகிழ்ச்சியில்லாத நிலை முதலியன.
செவ்வாய் 5ல் இருந்தால் புத்திர பிரச்சனை கர்பம் கலைதல் தத்து புத்திரம்...
செவ்வாய் 6ல் இருந்தால் இரத்த சம்பந்தமான நோய் எதிரிகளால் தொல்லை
செவ்வாய் 7ல் இருந்தால் மனைவிகளால் ஏற்படும் பிரச்சனை.வாழ்க்கைத் துணை ,திருமணம் ,
மணவாழ்வு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனை.குறுக்கு புத்தி,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,
புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் முதலியன
செவ்வாய் 8ல் இருந்தால் பாலின உறுப்புகளில் ஏற்படு்ம் பிரச்சனை .ஆயுள் குறைபாடு,
மாங்கல்யம் குறைபாடு,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள்,உறவினர்களிடம்
வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய் முதலியன
செவ்வாய் 12ல் இருந்தால் பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றில் பிரச்சனை,
மனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ணநோய் ,வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூரகுணம்,
வீண் செலவுகள்,அறுவை சிகிச்சை, இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன.

பரிகார காலம்:

சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி
என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள்
செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
 வாழைப்பூத் தானம்:
ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில்
கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள
வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து
தந்து விட வேண்டும் 
 துவரை தானம்: உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில்
பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை
பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
 ஒரு ஜாதகருக்கு எட்டாமிடம் தரும் தொல்லைகள்..பற்றி பார்ப்போம்....
 பொதுவாக ஒருவரது வாழ்கையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களையும், பிரச்சனைகளையும் அறிய உதவுவது, எட்டாமிடமாகும். எட்டுக்குடயவனின்
திசா, புக்தி மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் திசா, புக்தி போன்றவை நடைபெறும்போது ஜாதகருக்கு பிரச்சனைகளும், சங்கடங்களும் பெருமளவில் ஏற்படும்

ஜென்ம லக்னத்தில் எட்டுக்குடையவர் இருந்திடப் பிறந்தவருக்குப் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். மனத தளர்ச்சியும், சோர்வும் ஏற்படும் இருக்கும். ஏதாவது ஒன்று ஏற்பட்டு ஜாதகரது நிம்மதியைக் கெடுத்து, வருத்தப்பட வைத்துவிடும்.

தன் குடும்ப வாக்குஸ்தானம் என்னும் இரண்டாம்பவதில் எட்டுகுரியவர் இருந்தால்,தொழில் அல்லது உத்தியோகத்தில் பிரச்சனைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ஜாதகர் அதை விட்டு விலகி, வேறொரு தொழில் அல்லது உத்தியோகத்துக்கு அலையும்படி நேரும.
எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாகுறை ஏற்பட்டு பணத்துக்காக அலயநேரிடும். குடும்பத்தில் நிம்மதியிருக்காது.அவரசு பேச்சே
மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்.


மூன்றாமிடத்தில் எட்டுக்குரியவர் இருக்கப் பிறந்தவர் சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இல்லாதபடியும், கடுமையான சொற்க்களைப் பேசி, மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகும் நிலையை
யும் தரும்.

4மிடத்தில் 8 க்குரியவர் இருந்தால் தகப்பனார் தேடி வைத்தசொத்தை அழிப்பவராகவும், குழந்தைகளுடன் கருது வேறுபாடு கொள்பவராகவும்,
மனை, வீடு, வாகனம் இவைகளில் பிரச்சனை எதிர்கொள்பவராகவும் இருப்பார்

5மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் நிலையில்லாத புத்தியும், நிதானமில்லாத போக்கும், அரசாங்கத்தால் தொல்லையும், தரம் குறைந்தவர்களுடன் தொடர்பும் அதனால் அடிக்கடி பிரச்சனைகளைச் சந்திப்பதுமாக இருக்கும்

6மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் மற்றவர்களுடன் மனக்கசப்பும் , அடிக்கடி சண்டை சச்சரவுக்கு ஆளாகுதலும் நேரிடும்.
எட்டுகுரியவருடன் சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி நோய்ஏற்படும்
7மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் ஒழுக்கமில்லாதவர்களுடன் தொடர்பும், ஆசன வாயில் நோய்த் தொல்லையும் வரும். எட்டுக்குரியவர் அசுபர்களுடன் சேர்ந்து ஏழாமிடத்தில் இருந்தால் பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். . செவ்வாய் எட்டுக்குரியவருடன் சேர்ந்து இந்த பாவத்தில் இருந்தால் ஜாதகர் அமைதியாகவும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுபவராகவும் இருப்பார்.

எட்டுக்குரியவர் எட்டிலேயே இருந்தால் ஜாதகருக்கு நிறைந்த ஆயுளும் அதிகமான நிலபுலன்களும், மற்றவர்களால் அறிய முடியாத ரகசிய விவகாரங்களில் ஈடுபடுபவராகவும் ஜாதகர் இருப்பார்.

பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் ஜாதகருக்கு தகப்பனாருடன் சுமூகமான உறவிருக்காது. முன்னோர்களின் சாபம் இவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிடும். மனதில்
எப்போதும் ஏதாவது குழப்பமும், தேவையற்ற பயமும் இருக்கும். இவருடன் நீண்டகாலம் யாரும் பழக மாட்டார்கள். தொழிலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.
அடிக்கடி தொழில்அல்லது உத்யோகத்தை விட்டு விட்டு வேற தொழில் அல்லது வேலை தேடும் அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

ஜாதகத்தில் எட்டுக்குரியவர் பத்தாம் பாவத்தில் இருந்தால்
வேலையில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் அவமானங்களும்,
வேலைப்பளு, ஊதியக்குறைவு, மரியாதைக் குறைவு போன்ற அதிருப்தியான பலன்களை அதிகம் சந்திப்பர்.

லாபஸ்தானத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் அவர் ஈட்டும் வருமானம் பல வழிகளிலும் கரைந்து காணாமல் போய்விடும். இவரது உழைப்பை பலரும் உறிஞ்சி பயனடைவர். பிள்ளைகளால் மனக்கசப்பும் அதிருப்தியும் இருக்கும்.

பன்னிரண்டாமிடத்தில் எட்டுக்குரியவர் நின்றிட்டால், வேலையில் கெட்டிக்காரனாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல் வேலை செய்வது, இல்லாவிட்டால் மனம் போனபடி சுற்றுவது அல்லது முடங்கிக் கிடப்பது என்று தன் விருப்பப்படி நடந்து கொள்ளும் போக்கு காணப்படும். 
திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு ஜாதகத்தில் என்ன என்ன பார்க்க வேண்டும்?
மணமகன் மணமகள் ஜாதகத்தில்

1. முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்

2 ஆயுள் பாவமான எட்டாம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்

3. களத்திர பாவமான ஏழாம் இடமும் சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா எனறு பார்க்க வேண்டும்

4 பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

5. இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு , லக்கிண அமைப்பு ,யோக அமைப்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.

6. இருவர் ஜாதகத்திலும், திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது

இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டும். திருமண பொருத்தத்திவல் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம் என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

சிலர் மிருகசீரிடம் , மகம் , சுவாதி, அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்
பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் தவறான நடைமுறையாகும்

எல்லோருடைய வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான நிகழ்ச்சி ஆகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது மனம் ஒத்து செயல்படுவது நிதானமாக பொருமையாக செயல்படுவது முறைப்படி செயல்படுவது, குழந்தைகள் வளர்ப்பு என பல விஷயஙகள்இருக்கிறது.
 ஜாதகத்தில் என்ன அறியலாம்? எந்த பகுதியில் அறியலாம்?

1. 1மிடம் .லக்னம். இது ஜாதகரை பற்றி அறிய. பிரச்சனைக்கு உரிய தீர்வு என்ன? அது எப்போது?

2. 2மிடம். பணவரவினங்களை பற்றி அறிய, கண்ணை பற்றி அறிய, வாக்கு, புதியன வருதல்,
புதிய நபர் வருகை பற்றி,ஷேர் மார்க்கெட், இளைய சகோதரத்தின் இடமாற்றம்.
குழந்தையின் தொழில் வெற்றி,தந்தையின் நோய்,செருப்பு,கண்,பண இருப்பு,
விலை மதிப்புமிக்க பொருள், ஜாதகரது குடும்பம், வருமானம், வரவேண்டிய பணம் முதலியன

3. 3மிடம். சகோதரம்,தைரியம், வீரியம்\வீரம்,வெற்றி, அண்டை வீடுகள்,குறு தூரப் பயணம்,
மெயில\போன் செய்திகள், தகவல் தொடர்பு, வீடு விற்பனை, வேலைக்காரர்கள், செய்திகள்,
பேரம் பேசுதல்,பாகப்பிரிவினை செய்தல், ஆரம்ப கல்வித் தடை, நிருபர்கள், புரோக்கர்கள் பற்றி

4. 4மிடம் தாய், சுகம், குழந்தைக்கு வைத்தியம் செய்வது, வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்,
வீடு வாசல் ,மாடு,கன்று, கல்லறை,இரகசிய வாழ்க்கையை பற்றி, கற்பு பற்றி, தோட்டம், கட்டிடங்கள்,
விவசாயம், ஆரம்பக் கல்வி,வியாபாரம், நீர் ஊற்றுக்கள், திருடி வைத்திருக்கும் பொருட்கள்,
புதையல் பற்றி.

5. 5மிடம் குழந்தையைப்பற்றி, குழந்தை உண்டா? எப்போது,எத்தனை, குழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு,
குழந்தைக்கு தொந்தரவு, பாட்டன்,பாட்டி,பூர்வ ஜென்ம புண்யம், மனம், எண்ணம், வம்சா வழி,காதலைப்பற்றி
சந்தோஷம் பற்றி, அதீர்ஷ்டம்,இஷ்ட தெய்வம்,சிற்றின்பம், மந்திர உச்சாடனம்,உபாசனை, இஷ்ட தெய்வம்,
கற்பழிப்பு,வழிபாடு,ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் முதலியன

6. 6மிடம் கடனை பற்றி,நோய்யை பற்றியோ,வழக்கு பற்றி, ஜீரணம், ஊழியர், சிறுதொழில்,
சிறிய வருமானம் தரும் தொழில்,வெற்றிக்கான தடை, கஞ்சத்தனம், மிகப்பேராசை,
திருட்டு பற்றி, ஜெயில், மூத்த சகோதர பிரச்சினை, வளர்ப்புப் பிராணிகள், வீட்டு மிருகங்கள்
பற்றி அறிய

7. 7மிடம் திருமணம் , திருமண வாழ்க்கை , மனைவி, சட்டப்படியான அங்கீகாரம், சமூகப் பழக்க வழக்கம், நண்பர்கள்,
ஆயுளுக்குத் தொந்தரவு, திருடனைப் பற்றி, வேலையாட்களின் பணம், பொது ஜனத் தொடர்பு,
அபராதம், ஒரு பொருள் திரும்பக் கிடைத்தல் பற்றி,வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும்
இரகசிய விரோதிகளால் ஏற்படும் தொந்தரவு பற்றி, காணாமல் போனது எப்போது கிடைக்கும்


8. ஆயுள்பற்றி, காணாமல் போனது பற்றி, அவமானம் பற்றி,கண்டம் பற்றி, இயற்கையான மரணம்,
கெட்ட பயம்,வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு, வட்டி கட்டுதல்,திடீர் அதிஷ்டம், உயில்தடை,
கெட்ட செயல், வரதட்சணை,சீர், மாங்கல்யம், காணாமல் போனது எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்கும்,
ஆப்ரேஷன் பற்றி, கர்பப்பை பற்றி,வரவேண்டிய பணம், மரணம்.

9. தந்தை,மத ஆச்சாரம்,குல வழக்கம்,குருவை பற்றி,உடனே பலன் தரும் தெய்வம், மதத்தின் மீதானபற்று,
மறுஉலக தொடர்பு, பெரியவர்கள், தூரத்து செய்திகள்,திருமண மண்டபம்,கலாச்சார விருப்பம்,
நீண்ட தூரப் பயணம், தொழில் விரயம், தெய்வ வழிப்பாட்டு இடம்,தம்பியின் மனைவி,
பணம் புரட்டுதல்,ஜபம்,உயர் கல்வி ,வெளிநாட்டுப் பயணம்,

10. தொழில்,ஜீவனம் ,புகழ்,கௌரவம்,சமூக அந்தஸ்த்து,கர்மம்,கருமாதி,இறுதிச்சடங்கு,
புனித வழிபாடு,குழந்தையின் நோய்,மூத்த சகோதரத்தின் விரயம்,தத்துக் குழந்தைகள்,
தீர்ப்பு,மரணம் அடைந்தவர்களை பற்றி.

11. லாபம்,மூத்த சகோதரம்,எதீர்பார்த்தது நன்மையில் முடியுமா?,நண்பர்கள்,ஆசைகள்,
முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசனை. உதவி கிடைக்குமிடம்
வெற்றி,மருமகன்,மருமகள்,நீர்ப் பாசன வசதிகளுடன்கூடிய விவசாய நிலங்கள்.
அரசு மன்றங்கள்\குழுக்கள் (சட்ட சபை,ஊராட்சி,நகராட்சி),நிரந்தர நட்பு\நண்பர்கள்,திட்டங்கள்
வரவேண்டிய பணம் கிடைக்கும் நேரம் முதலியன.

12. செலவு\விரையம், மருத்துவம், நஷ்டம் முதலியவை பற்றி முக்தியடைதல் மோட்சம் கிடைத்தல் பற்றி.

இதையும் பாருங்க...
    செவ்வாய் தோஷம் பற்றி.........
 செவ்வாய் தோஷம் என்பது 2,4,7,8,12 ஆகிய வீடுகளிலும் , லக்னத்திலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படுகிறது.செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான தோஷமாக கருதபடுகிறது. ஆனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என முடிவு செய்வதற்கு முன்னால் சில விதிவிலக்குகளையும் (exceptions) கவனித்து பிறகே முடிவு செய்ய வேண்டும் .சில விதிவிலக்குகளை கீழே கொடுத்து உள்ளேன். மேலும் இதுபோன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. உங்கள் ஜோதிடரை கலந்து ஆலோசித்து பிறகு செவ்வாய் தோஷ ஜாதகங்களை பற்றி முடிவு செய்யவும்.

  • செவ்வாய் மேஷ ராசி அல்லது விருசிக ராசியில் ஆட்சி அடைந்து இருந்தாலோ மற்றும் மகர ராசியில் உச்சம் அடைந்து இருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்
  • கடகத்தில் நீச்சம் அடைந்தாலும் தோஷம் இல்லை
  • சிம்ம லக்னம் மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
  • செவ்வாய் குரு அல்லது சனி அல்லது சூரியன் அல்லது புதன் அல்லது சந்திரன் ஆகிய கிரகங்களில் எதாவுது ஒன்றுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்கபட்டாலோ செவ்வாய் தோஷம் இல்லை.