Sunday, June 28, 2015
Thursday, June 25, 2015
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 35௦......
என்ன சொல்கிறது.?
.
1. உங்கள் கோரிக்கைகை மனுக்களை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளிடம் நீங்கள் கொடுக்கலாம்.
.
2. உங்கள் கோரிக்கைகை மனுக்களை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளிடம் நீங்கள் உங்கள் தாய் மொழியில் கொடுக்கலாம்.
சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர்கள் தான் சட்டம் பற்றிப் பேச வேண்டுமா ?
.
அப்படி என்றால் கு.வி.மு.ச. பிரிவு 2 (17 ) தேவை இல்லையே ....
.1. அமைப்பின் முகவரி தொடர்பாக.... நமது அமைப்பின் அலுவலகம் . . . 3/17 பிராமிண் வீதி, கரகம் பாக்கம், . போரூர், சென்னை. . – 6௦௦ 116. ஆகும்.
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும்,
அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே
பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க.
அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்
நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல
வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம்.
எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும்
பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு
தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும்
குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி
வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.
நன்றி --- இன்று ஒரு தகவல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
உபயோகமான தகவல்கள் !!!
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய
விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான
வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.
இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

ஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு?
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சட்டத்தை மதிப்போம்.தலைக்கவசம் அணிந்து நம் உயிர் காப்போம்.எஸ். அசோக் (விகடன் செய்திகள்-24.06.2015)அவர்களது ஆதங்கத்தை தலையங்கமாக எண்ணிப் படியுங்க..
ஸ்ரீனிவாசன் வாசு 1 புணரமைக்காத சாலைகள் பல உண்டு,.
2 Drunk and drive
3 Over speed
4 Over seated person
5 Licence given illegally..லஞ்சம் வாங்கிக் கொண்டு..
6 Proper signal working
இது அனைத்தும் விதிகளின் படி சரியாக நடந்தால் விபத்து என்பது அரிது,
தரமற்ற சாலை, வாகன நெரிசல், வாகனப்பெருக்கம் போன்றவற்றை மக்களுக்காக தாமாக வந்து விசாரிக்காமல், அன்றாடம் புதியனவாக பதியப்படும் வாகனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் ஹெல்மெட் மூலமே உயிர் காக்கப்படும் என்று

வரும்2015 ஜூலை-1 ந் தேதி முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு
வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விபத்துக்களை குறைக்காமல், ஹெல்மெட் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தி, 'ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் ஆயுள் காக்கும்' என்ற போலீசின் பிரசாரம் இடைத்தேர்தலை விட சூடு பிடித்துள்ளது.
ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி செலவழித்து போடப்படும் தரமற்ற சாலையின் அவல நிலையை பார்த்து நீதிமன்றம், அரசிடம் சாலையின் தரத்திற்கான தரச் சான்று கேட்காமல், ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் சர்வதேச தரச் சான்றுடன் ரசீதுடன் உள்ளதா என சோதனை செய்யச் சொல்வதை, புரியாத புதிராக உள்ளதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
திரும்பிய இடமெல்லாம் ஹெல்மெட் கடைகள். தலைக்கு விலை வைக்கும் தலைக் கவசம், கடைகளில் தலை கீழாகத் கட்டித் தொங்க விடப்பட்டு, உயிரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஊழலில் ஊறிப்போன உயிரற்ற சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிர் காக்க சட்டம் போட்ட நீதிமன்றம், சாலையின் உயிருக்கு எந்த உத்தரவாதமும், கேள்வியும் கேட்காத நிலையில், சாலையை முழுவதுமாக தரமாக போடாமல் (கமிஷன் பிரச்னையோ? ) சாலைக்கு பஞ்சர் ஒட்டும் வேலையை அரசு துரிதமாக நடத்தி வருகிறது.
வண்டி ஓட்டுனர் பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம் கண் முன்னாலிருக்கும் சாலையை தரமாக போடச் சொல்ல மறந்து விட்டதே?
மோட்டார் வாகனச் சட்டம், நீதிமன்றம், போலீசாரால் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே புரியாத நிலையில், விபத்தை கொடுக்கும் வாகன நெரிசல் பற்றியும், விடை தெரியாத இதர சட்டம் பற்றிய கேள்விகள் தொடர்கின்றன...
1. காரில் முன் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. முன்னணித் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் கூட சீட் பெல்ட் அணியாமல்தான் வாகனத்தில் வருகின்றனர். சட்டம் பேச முடியுமா?
போலீஸ் உயர் அதிகாரிகள் முன் இருக்கையில் அமர்ந்து செல்கையில் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? போக்குவரத்து போலீசார் சீட் பெல்ட் அணிந்து வந்ததாக செய்தி உண்டா? வட்டாரப் போக்குவரத்து ஆய் வாளர் ஓட்டுனர், சீட் பெல்ட் அணிந்து வருகிறார்களா? சட்ட மேதைகளின் ஓட்டுனர்கள் கூட சீட் பெல்ட் அணிகின்றனரா?
2. சக பயணிகளை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்க மோ.வா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. திண்டுக் கல்லில் போலீஸ் உடையில் இருந்த எஸ் .ஐ., பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு என்ன அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?? .
3. சட்டப்படி மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் செல்வது தவறு தான்....அதற்காக சென்னை கே.கே நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரின் சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை கொன்றதை சட்டம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது நியாயமா?
4. விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக ,மோசமாக பொறுப்பற்ற வகையில் வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்க சட்டமுள்ளது. சென்னையில் இருந்து 464 கிமீ தூரமுள்ள மதுரைக்கு, இரவு 10 மணிக்கு கிளம்பும் வண்டி, 5 மணி நேரம் 30 நிமிடத்தில், சராசரியாக 85 கிமீ வேகத்தில் மதுரைக்கு வரும் பட்சத்தில் அது வாகன சட்ட வேக வரைமுறைக்கு உட்பட்டதா?
இந்திய மோ.வா. சட்டப்படி கனரக பயணிகள் போக்குவரத்து வாகனம், மணிக்கு 65 கிமீக்கு மேல் செல்ல தடையும், அபராதமும் விதிக்க சட்டம் உள்ளது. தோராயமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ஓடும் வாகனத்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளார்களா?
5. படிக்கட்டில் நின்றபடி, தொங்கியபடி பயணம் செய்ய அனுமதித்தால் ரூ.100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. சென்னையில் அரசுப்பேருந்துகளில் படிக்கட்டில் தொங்காத மாணவர்களைப் பார்ப்பதே அரிது. எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?
6. குடிபோதையில் வண்டி ஓட்டினால் ரூ. 2000 அபராதம், 6 மாதம் சிறை விதிக்க சட்டம் சொல்கிறது. சமீபத்தில் போதையுடன் பயணிகளிடம் பிடிபட்ட தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனருக்கு சட்டம் என்ன தண்டனை அளித்துள்ளது? அப்பாவிகள் உயிரை எமனிடம் சேர்க்க முற்பட்ட குடிபோதை ஓட்டுனர் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனரா?
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6821. அங்கு வரும் வண்டிகளின் எண்ணிக்கையோ பல ஆயிரம். நாளொன்றுக்கு ஒரு கடைக்கு வரும் போதை ஆசாமி ஒருவர் வீதம் 6821 வண்டிகள் மீது வழக்குப்போட முடியுமா? தமிழ்நாட்டின் அவலமே இதுதான். குடிக்காதவர் ஹெல்மெட் மறந்து வைத்து விட்டு போனால் அபராதம்... குடித்து விட்டு வண்டி ஓட்டினால் கூட அபராதம் போட போலீசுக்கு அதிகாரமில்லை. நீதிமன்றமே நேரடியாக டாஸ்மாக் கடை முன் வண்டிகளை நிறுத்த தடை விதிக்கலாமே?
7. மோசமான டயர் கொண்ட வண்டிக்கு ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் சொல்கிறது. அரசுப்பேருந்துகளின் டயர் நிலைக்கு எவ்வளவு அபராதம் போடப்பட்டுள்ளது?
8. அதிவேகத்துடன் ஓட்டப்படும் வண்டிக்கு, அபராதம் ரூ. 1000 விதிக்க சட்டமுள்ளது. மோ.வா. ச 112 இன் படி ஒவ்வொரு வாகனத்திற்கும் வேகம் குறிப்பிடப்பட்டு இருக்கும்போது அதிவேகமாக செல்லும் வகையில், வாகனம் தயாரிக்க நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது. உதாரணமாக இரு சக்கர வண்டி 65 கி.மீ.க்குள்தான் செல்லவேண்டும் என்றால் 120 கி.மீ.க்கு ஓட்டும் அளவிற்கு வண்டி வடிவமைப்பை அனுமதிப்பதேன்?
9. உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும், கருப்பு நிற ஸ்டிக்கர் நீக்காமல் ஓடும் பணக்கார கார்களை போலீசாரால் நிறுத்தி அபராதம் விதிக்க முடியுமா? இரு சக்கர வாகனச் சாவியை பிடுங்குவது போல காரை நெருங்கி பார்க்கும் தைரியம் உள்ளதா?
10. பக்க கண்ணாடி, சைகை விளக்கு, ஒலிப்பான் (ஹாரன்) இல்லாமை, அதி வேகத்துடன் முந்திச் செல்வது (over taking ) போன்றவற்றிற்கும் மோ.வா சட்டம் ரூ.100 அபராதம் விதிக்கச் சொல்கிறது. இன்றைக்குள்ள பெரும்பாலான ஆட்டோக்களில் பக்க கண்ணாடி இருக்காது. இடதுகைப் புறமாக முந்திச் செல்வதில் ஆட்டோக்கள் முதலிடம் பிடிக்கின்றன. இதுவரை எத்தனை வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்?
11. அனைத்து அரசு, தனியார் வாகனத்தின் ஹெட் லைட்டுகள் (முகப்பு விளக்குகள்) கண்கள் கூசும் அளவிற்கு உள்ளது. கண்கள் கூசும் அளவிற்கு ஹெட் லைட்டுகள், ஒரு வண்டிக்கு 10 விளக்குகள், பகலில் கூட விளக்கு வெளிச்சம் போட்டு கண்கள் கூசச் செவதற்கு இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. இதுவரை எத்தனை வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளார்கள்?
12. இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம், காரில் பின் இருக்கையில் அமர்பவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் எனச் சொல்லாதது ஏன்?
13. நிறுத்தக்கூடாத இடத்தில்ஆட்களை ஏற்றி அனைத்து வாகனத்திற்கும் இடையூறு செய்யும் மினி பஸ், ஆடோக்கள் மீது சட்டப்படி எவ்வளவு அபராதம் இது வரை விதிக்கப்பட்டுள்ளது? போக்குவரத்திற்கு இம்சை செய்யும் கார்கள், அரசியல் கட்சிக் கொடியுடன் நிறுத்தப்படும் வண்டிகளுக்கு போலீசாரால் அபராதம் விதிக்க முடியுமா? அப்பளம் போல நொறுங்கிப்போகும் நான்கு சக்கர வண்டிகளின் விபத்தின் விகிதம் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
14. சென்னையில் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் வாரம் ஒருநாள் சென்னையின் முக்கிய இடங்களில் இருசக்கர வாகன பந்தயம் நடத்துவது போக்குவரத்துப் போலீசாருக்கு தெரியுமா...சமீபத்தில் சென்னையில் அப்பாவி உயிர்கள் பலியான சம்பவங்கள் அதன் விளைவுதான் என தெரிந்தும், அதற்கான உரிய சட்டப்பிரிவுகளில்தான் காவல்துறை வழக்குப்பதிந்ததா? காலம் காலமாக நடந்துவரும் இந்த பந்தயத்தினால் முக்கிய சாலைகளில் பயணம் செய்யவே பொதுமக்கள் அஞ்சுகின்றனரே அது காவல்துறைக்கு தெரியுமா?
சட்டப்படிதான் நடக்க வேண்டும் எனச் சொல்லும் காவல் துறை மீது லஞ்சப்புகாரும், பாலியல் புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன. சட்டப்படி யார் நடவடிக்கை எடுக்க முடியும்? ஏற்கனவே லஞ்சப்புகாரில் முதலிடம் வகிக்கும் போலீசார், ஹெல்மெட் மூலம் தொடர்ந்து முதலிடம் பெறுவார்கள் என்ற (அவ) நம்பிக்கையை தகர்க்க லஞ்ச ஒழிப்பு போலீசார்,
" சட்டப்படி" நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.
நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில் உடன்பாடுதான். ஆனால் ஹெல்மெட் மட்டுமே முக்கியம் எனக் கருதாமல் இதர போக்குவரத்து சட்ட விதிமுறைகளை போலீசார் முறையாக அமல்படுத்தினால் விபத்திற்கு விடுதலை கட்டாயம் உண்டு.
- எஸ். அசோக் (விகடன் செய்திகள்-24.06.2015)
மரியாதைக்குரிய எஸ்.அசோகன் அவர்களது ஆதங்கத்தை வரவேற்கிறேன்.அதே சமயம் ஹெல்மெட் போடுவதை ,நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக கூறி இருக்கிறீர்....வாழ்த்துக்கள்.

Saturday, June 6, 2015
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ந்தேதி
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். இன்று ஜூன் 5..உலக சுற்றுச் சூழல் தினம்..
உலகை காக்கும் இயற்கையைப் பற்றி எண்ணும் தினம்.
இதன் காடுகளில் உள்ள உண்மைகள்
a வனங்கள்..
b. உணவு, உறைவிடம்,உடை, மருந்து மற்றும் நீர் ஆகியவற்றின் ஆதாரம் வனமே.
c. மக்களின் வாழிடம் மற்றும் உயிரி பல்வகைமையின் அச்சாணியும் வனம்தான்.
d. உலகின் மைய வானிலையை சீரமைப்பதில் வனம் முக்கிய கதாநாயகன்.
e. நம்து வாழ்க்கைக்கும், நல வாழ்வுக்கும், உலகம் முழுவதும் உள்ள 7 பில்லியன் மக்கள் வனத்தை மட்டுமே.. நம்பி உள்ளனர்.
f. காடுகள் 40 மில்லியன் ச.கி.மீ பரப்பில் உள்ளன.
g. பூமியின் 1/3 பகுதியைவிட குறைவு.
h. 1999-2000 ஆண்டில் 83,000 ச.கி.மீ பரப்பில் காடுகள் இருந்தன.
i. 2000-2010 ல் 52,000 ச.கி.மீ காடுகள் ஆண்டுதோறும் அழிகின்றன
2. இந்தியாவில் சரியாக 19.27% காடுகள் உள்ளனஇந்தியாவில் 16 வகை பெரிய வகை &221 சிறிய வகை காடுகள் உள்ளன
3. 950 மில்லியன் மக்கள் & 650 மில்லியன் கால்நடைகள் காடுகளைச் சார்ந்திருக்கின்றனமித அடர்த்தி காடுகள் 9.71%
4. அடர்த்தியான காடுகள்.. 2.54%
5. திறந்த காடுகள் 8.77%
6. கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டருக்கு மேலஉள்ளபகுதியில் காடுகள காணமுடியாது
a. வனங்கள் நில உயிரிப்பன்மையின் 80% தன்னகத்தே கொண்டுள்ளது.
b. இந்திய வனங்கள் 1,30,000 உயிரிகளின் ஆதாரமாய் உள்ளது.
c. 372 பாலூட்டிகள்.
d. 2000 பறவைகள்
e. 1693மீன் வகைகள்
f. 60,000 பூச்சி வகைகள்.
7. இந்திய வனங்களின் பரப்பு:67.71 மில்லியன் ஹெக்டேர்(20.60இலையுதிர் காடுகளை பருவமழை காடுகள் என்றும் அழைக்கலாம். Tஇவை இந்த்யாவில் 200-75 செ.மீ மழை பெய்யும் இடங்களில் உள்ளன.
8. இவைகளே இந்தியாவிலுள்ள காடுகளில் 50% க்கும் மேல்.
9. இவை பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை..
10. Moist Deciduous Forest Dry Deciduous Forestsஇவை 75 செ.மீ க்கும் குறைவாக மழை பெய்யும் இடங்களில் காணப்படும்.
11. இது வடமேற்கு இந்தியாவ்வின் சௌராஷ்டிரத்திலிருந்து,தெற்கு பஞ்சாப் வரை.
12. இது ராஜஸ்தான் பகுதிகள், புஞ்சாப், உ.பி, ம.பி ஹரியானா & தென்னிந்திய பகுதிக்ள்.
13. கிகார், பாபூல், கையார், அகேசியா, முன் ஜ் & புல் வ்கைகள் காணப்படுகின்றன.
14. இப்பகுதிகள் காலப்போக்கில் வீட்டு மனைகளாகவும் மாற்றப்படுகின்றன.
வடக்கு பஞ்சாப்& மேற்கு ராஜஸ்தானில் 50 செ.மீ மழை குறைவாகப் பெய்தால், முள் & கள்ளிச் செடிக்ளே வள்ர்கின்றன
a. முள் & புதர் காடுகள்ஒவ்வொரு ஆண்டும், காடுகள் அழிப்பின் மூலம், 130,000 ச.கி.மீ காடுகள் அழிக்கப்படுகின்றன. (FAO)
b. காரணிகள்.
c. விவசாயம்.
d. மரம் வெட்டுதல்
e. அணைகள் & சுரங்கம்.
f. வளர்ச்சித் திட்டங்கள் சர்வெ தேச வாணிபம்காடுகள் அழிப்பின் மூலம், வெப்ப மணடல மழைக்காடுகளில் தினம் சுமார் 100 வகை உயிரிகள் மடிந்து போகின்றன..
g. காடுகளின் சமனமின்மை, வறட்சி & வெள்ளத்திற்கு வழி கோலுகிறது.
15. ஆந்திரா, அசாம் மற்றும் சத்திஷ்கர் போன்ற மாநிலங்களில் காடுகள் வேகமாக அழிந்து
16. வருகின்றது
17. காலநிலை மாற்றமும், காடுகளும் இணைபிரியாத உறவைக் கொண்டவை.
18. ஒன்றுடன் ஒன்று இரண்டறக்கலந்தவை.
19. ஏற்கனவே உலகள்வில் ஏற்பட்டுள்ள கால் நிலை மாற்றம் எனபது காடுகளை மிக மோசமாக பாதித்துள்ளது.
20. மழை அளவை குறைத்துள்ளது.
21. கால நிலை இஷ்டப்படி, நிலை மாறுகின்றது
22. அதே சமயம் காடுகள் தான் கணிசமான அளவு கரியுமில வாயுவை..விழுங்குகின்றன.
23. கால நிலையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
24. ஆனால், வேறு வழியின்றி, காடுகள் அழிக்கப்பட்டால், அதுவேதான் பசுமை அக வாயுக்கள் மூலம், வெப்ப நிலையை உயர்த்துகிறதுகடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களின்,வளர்முக நாடுகளின் பாதிப்பு
25. 88 %க்கு மேல்
26. சந்தை பொருளாதாரத்தால் ஏற்பட்ட மிகப் பெரிய ஈடுகாட முடியாத பேரிழப்பு .!.
27. உலகத்துக்கு எது என்றால் இந்த காலநிலை மாற்றமேஅமெரிக்காவைப்போல் சைனாவில் ஒவ்வொரு வீட்டிலும் கார் இருந்தால் உலகத்தின் மொத்த பெட்ரோலிய உற்பத்தி அந்த நாட்டுக்கே போதாது
28. லண்டனில் ஒரு கார் நகரும் சராசரி வேகம் நூறாண்டுகளுக்கு முந்தைய குதிரை வண்டியின் வேகத்திற்கு சமம்

திருப்பதி தேவஸ்தானம் பற்றிய தகவல்கள்...
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
வணக்கம்.
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது
ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான
அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல!
சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள்,
நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.
* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.
* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?
ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.
* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.
* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.
* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.
* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.
* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.
* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.
* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.
* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

Subscribe to:
Posts (Atom)