PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !
பொறுமை கடலினும் பெரிது! மனிதஉயிர்அதனினும்பெரிது!!
Saturday, May 11, 2024
Wednesday, August 22, 2018
Friday, August 10, 2018
Wednesday, August 8, 2018
Sunday, May 14, 2017
சேவை செய்யுங்க.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.அதனால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்க.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை.
ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்!
எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்.
நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப்போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டு விடும். அப்போது நீங்கள் இருந்தால்தானே உங்களைக் கேட்பதற்கு! புரிகிறதா உங்களுக்கு!!!
உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும்.
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு்உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது.
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண இயலாது.
அரண்மனையே என்றாலும் கண்ணைமூடி தூங்க எட்டுக்கு எட்டு அடி இடமே போதும். ஆகவே, ஓரளவு இருந்தால் போதுமென்று இருங்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்.
யாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.
மனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள உதவுவார்கள்!!!
வரும் காலங்கள் நலமாக அமையும் என்று நம்புவோம்.
என ஆலோசனை வழங்கிய இரா.செழியன் அவர்களுக்கு நன்றிங்க.

Sunday, May 7, 2017
Sunday, April 30, 2017
மே தின வாழ்த்துக்கள்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.இன்று மே தினம் அதாவது உழைப்பாளர் தினம்.உழைக்கும் அனைவரையும் வாழ்த்துவோம் வாங்க.
அமெரிக்காவில்
1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர
வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல்
பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து
இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்
தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி
1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சிக்காகோ பேரெழுச்சி[தொகு]
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கறுப்பு தினம்
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
அனைத்து நாடுகளிலும் மே தினம்[தொகு]
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
இந்தியாவில் மே தினம்
தொழிலாளர் வெற்றிச் சின்னம் சென்னை மெரினாவில்
இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

Subscribe to:
Posts (Atom)